தமிழர்களுக்கும்  அரசு செய்யும் பச்சை துரோகம் – வைகோ

  • இலங்கைக்கு ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்க  50 மில்லியன் டாலர் நிதியாக வழங்குவதாக இந்திய அரசு அறிவித்தது.
  • தமிழர்களுக்கும்  அரசு செய்யும் பச்சை துரோகம் என்று வைகோ கூறியுள்ளார். 

இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே – பிரதமர் மோடி சந்திப்பு  நடைபெற்றது.அப்போது  இலங்கை ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்க 50 மில்லியன் டாலர் நிதியாக வழங்குவதாக இந்திய அரசு அறிவித்தது.

இந்நிலையியில் இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு ஆயுதத் தளவாடங்கள் வாங்க  50 மில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பது  கண்டனத்துக்கு உரியது. இலங்கை கடற்படை இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழக மீனவர்களை, அத்துமீறி கைது செய்கின்றது.மேலும்  சிறையில் அடைப்பதும்,அவர்களை  சித்திரவதை செய்து துன்புறுத்துவது தொடர்ந்து நடக்கிறது.

மத்திய அரசு தமிழக மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கை அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம். இந்தச்செயல் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல இங்குள்ள தமிழர்களுக்கும்  அரசு செய்யும் பச்சை துரோகம் ஆகும்.எனவே மத்திய அரசு, இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.