அரசு  மருத்துவர்களுடன் பேசி தீர்வுகாண வேண்டும் – ராமதாஸ் அறிக்கை

அரசு  மருத்துவர்களுடன் பேசி தீர்வுகாண வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு , மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு  50 சதவீத இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஊதிய உயர்வு, மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் கடந்த 24-ஆம் தேதி முதல் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் 4-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இந்தப் போராட்டத்தால் அப்பாவி ஏழை நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.எனவே அரசு காத்திருக்கமால் மருத்துவர்களுடன் பேசி தீர்வுகாண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.