இந்திய வம்சாவளியை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் கொரானா தொற்றால் உயிரிழந்தார்.!

கொரோனா பாதிப்பால் தென்னாப்பிரிக்காவில், இந்திய வம்சாவளியை சேர்ந்த தென்னாப்பிரிக்க வைரஸ் ஆராச்சியாளர் கீதா ராம்ஜி உயிரிழந்துள்ளார்.  

இவர் ஒரு தடுப்பூசி விஞ்ஞானியாக இருந்துள்ளார். மேலும், எச்.ஐ.வி தடுப்பு ஆராய்ச்சி குழு தலைவராகவும் இருந்துள்ளார். கீதா ராம்ஜி கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் லண்டனில் இருந்து திரும்பியுள்ளார். ஆனால் அவருக்கு அப்போது கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் எதுவும் அவருக்கு அறியப்படவில்லை என கூறப்படுகிறது.

64 வயதான கீதா ராம்ஜி, டர்பனில் உள்ள தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் மருத்துவ பரிசோதனை பிரிவு முதன்மை ஆராய்ச்சியாளராகவும், எச்.ஐ.வி தடுப்பு பிரிவின் இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.