ஹாலிவுட்டில் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்! மாஸ் அப்டேட்ஸ் இதோ!

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் இசையமைப்பாளர்

By manikandan | Published: Sep 22, 2019 08:15 AM

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக, 100 % காதல், அடங்காதே, ஜெயில், என பல படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன. பேச்சிலர், ஆயிரம் ஜென்மங்கள், காதலிக்க யாருமில்லை ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. அதே போல இசையமைப்பாளராக தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள அசுரன் படத்திலும், சூர்யா - சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகும் சூரரை போற்று திரைப்படத்திலும் மெட்டு போட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு ஹாலிவுட்டில் ஒரு படம் நடிக்க உள்ளார். இந்த படத்தினை ரிக்கி ப்ரூச்சல் இயக்க உள்ளார்.KYYB எனும் ஹாலிவுட் பட நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் தான் முன்னணி வேடத்தில் நடிக்கிறாரா, அல்லது குறிப்பிட்ட கதாபாத்திரமா என மற்ற அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பத்திற்கு ட்ரப் சிட்டி எனும் பெயரிடப்பட்டுள்ள்ளது.
Step2: Place in ads Display sections

unicc