பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரையும் இந்தியா நிர்வாகிக்கும் காலம் வரும்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Foreign minister Jaishankar arrives in time to rule Pakistan-occupied Kashmir and India

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரையும் இந்தியா நிர்வாகிக்கும் காலம் வரும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும்  மேலும் ஜம்முவை தனி யூனியன் பிரதேசங்களாகவும் , லடாக்கை தனி யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் டெல்லியில்  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, ஒருநாள் அது இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Union Foreign Minister Jaishankar has said that the time will come when India will manage Pakistan-occupied Kashmir. The central government has announced that the special status granted to the state of Jammu and Kashmir will be canceled. At this point, Union Foreign Minister Jaishankar told reporters in Delhi.