திமுகவில் குடும்ப அரசியலே நடக்கிறது! – ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ கு.க. செல்வம்

திமுக வாரிசு அரசியலாக மாறி விட்டது. தற்போது குடும்ப அரசியலே நடக்கிறது.

திமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ கு.க. செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது.இதனிடையே  டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இதன் பின்னர் எம்எல்ஏ கு.க. செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், என்னுடைய தொகுதி விவகாரங்களை குறித்து தான் ஜே.பி.நட்டா அவர்களை சந்தித்தேன். திமுகவில் உட்கட்சி தேர்தலை ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும். தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை மு..க. ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், எம்.எல்.ஏ.  கு.க.செல்வம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, கு.க.செல்வம் கூறுகையில், திமுகவில் இருந்து என்னை தற்காலிகமாக நீக்கியுள்ளார். மொத்தமாக நீக்கினாலும் எனக்கு கவலையில்லை. அதுபற்றி நான் வருத்தப்படப் போவதுமில்லை. திமுக வாரிசு அரசியலாக மாறி விட்டது. தற்போது குடும்ப அரசியலே நடக்கிறது.’ என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.