மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர்! குவியும் பாராட்டுக்கள்!

தனது பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யும் ஆசிரியர்

By leena | Published: May 07, 2020 08:30 AM

தனது பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யும் ஆசிரியர் கமலவல்லி.

இந்திய முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் தங்களது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் குடும்பத்திற்கு ஆசிரியர் கமலவள்ளி தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கருப்பம்புலம் கிராமத்தில் உள்ளது ஞானாம்பிகா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி.

இந்த பள்ளியில் 28 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் இரு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் கமலவல்லி, மாணவர்களின் குடும்பத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்துள்ளார்.

இவர், ஒவ்வொரு மாணவரின் குடும்பத்திற்கும் ரூ.1,000 ரொக்கம் வழங்கியுள்ளார். மேலும் சிலரின் குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனத்தின் மூலமாக ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களையும்  கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர் கமலவல்லி கூறுகையில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருமே அன்றாடம் வேலைக்கு சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்பவர்கள். தற்போது ஊரடங்கால் வறுமையில் வாடும் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய நினைத்தேன் என தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளி ஆசிரியரின் இந்த  செயல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிற நிலையில், இவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Step2: Place in ads Display sections

unicc