ஊரடங்கு காலத்தில் காதலியுடன் இருமுறை சந்தித்த விஞ்ஞானி… எழுந்த சர்ச்சயை தொடர்ந்து பதவியை இழந்தார்…

உலகம் முழுவதும் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பரவலை தடுப்பதற்காக உலகம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில் சூரியன் மறையாத நாடான இங்கிலாந்து கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் அங்கு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன்படி பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு வடிவத்திலான உடற்பயிற்சிக்காகவும், அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியும் என்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உன்னத திட்டத்தை லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோயியல் நிபுணரும், விஞ்ஞானியுமான நீல் பெர்குசன் (வயது 51) தலைமையிலான சாகே என்று அழைக்கப்படக்கூடிய அறிவியல் ஆலோசனை அவசர குழு அளித்த இந்த  திட்டத்தை ஏற்றுத்தான் இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டுமக்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில்,  தான் உருவாக்கித்தந்த ஊரடங்கு திட்டம்  தனக்கே எதிரியாக வந்து நிற்கும் என்று அந்த விஞ்ஞானி நீல் பெர்குசன் நினைத்துக்கூட பார்த்து இருக்க மாட்டார். அவருக்கும், ஏற்கனவே கல்யாணம் ஆகி கணவர், குழந்தைகள் என குடும்பத்துடன் வாழும் அன்டோனியா ஸ்டாட்ஸ் என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்த காதலின் காரணமாக, ஊரடங்கு கால விதிமுறைகளை மீறி காதலி அன்டோனியா ஸ்டாட்ஸ் வீட்டை விட்டு வெளியேறி, காதலர் நீல் பெர்குசனின் லண்டன் வீட்டுக்கு 2 முறை வந்து சென்று இருக்கிறார். இந்த செயல் ஊரடங்கு விதிமுறையை மீறிய செயல் ஆகும். ஏற்கனவே நீல் பெர்குசனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 2 வாரங்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, அந்த கால கட்டம் முடிந்ததும் இந்த காதல் சந்திப்பு அரங்கேறி இருக்கிறது. இந்த காதல் சந்திப்பு குறித்து அந்த நாட்டில் இருந்து வெளிவருகிற ‘டெய்லி டெலகிராப்’ என்ற பத்திரிகை படம் பிடித்து இங்கிலாந்திற்கே காட்டியது. எனவே அங்கு எழுந்தது சர்ச்சை. முடிவில்  விஞ்ஞானி நீல் பெர்குசன், அறிவியல் ஆலோசனை அவசர குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அந்த அறிஞர் குறிப்பிடுகையில், “நான் செய்த தவறை ஒப்புக்கொள்கிறேன். அது தீர்ப்பின் பிழை ஆகும். நான் தவறான நடவடிக்கை எடுத்து விட்டேன். எனவே நான் அறிவியல் ஆலோசனை அவசர குழுவில் இருந்து ராஜினாமா செய்து விட்டேன்” என்று செய்தியாளர்களுக்கு கூறினார்.
author avatar
Kaliraj