#Corona virus : இந்தியாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட 6 மாநிலங்கள் !

இந்தியாவில் மிகவும் மோசமாக கொரேனா பாதிக்கப்பட்ட 6 மாநிலங்கள். 

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மே 17ம் தேதி வரை ஊரடங்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 52,952 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1783 ஆக உயரிந்துள்ள நிலையில் 15,267பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கெரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 16,758 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பால் 651 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,3094 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து குஜராத்தில் 6,245 பேரும், டெல்லியில் 5,104 பேரும், தமிழ்நாட்டில் 4,058 பேரும், ராஜஸ்தானில் 3,158பேரும், மத்திய பிரதேசத்தில் 3,049 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

author avatar
Vidhusan