ஜொலித்த ஆல் -ரவுண்டர் மார்ஷ் !சொந்த மண்ணில் தடுமாறும் இங்கிலாந்து அணி

கடைசி ஆஷஸ்  தொடரில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும்  இங்கிலாந்து இடையே  ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த நான்கு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2- 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனிடையே  நேற்று 5-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆட்டம் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழந்தது தடுமாறியது. இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழந்து 271 ரன்கள்  எடுத்தது. களத்தில் பட்லர் 64 , ஜாக் லீச் 10 ரன்களுடன் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சில் மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குகிறது.

Related News