உடற்பயிற்சி செய்வதற்கு எது சரியான நேரம் தெரியுமா….?

நம் அனைவரையும் பொறுத்தவரையில் உடற்பயிற்சி செய்வதற்கு மிக சரியான நேரம் காலை நேரம் என்று தான் எண்ணுகிறோம். ஆனால் இது முற்றிலும் தவறானது. உடற்பயிற்சி என்பது நமது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியும், உற்சாகமும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் உடற்பயிற்சி செய்வதில் ஒரு பலன் இருக்கும்.

நாம் காலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது தான் உடலுக்கு மிகவும் நல்லது என ஆய்வுகள் கூறுகிறது.

மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் :

அவசரமில்லா உடற்பயிற்சி: 

மாலையில் உடற்பயிற்சி செய்யும் போது உடலுக்கு பல நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. மாலையில் உடற்பயிற்சி செய்யும் போது நிதானமாகவும், பொறுமையாகவும் உடற்பயிற்சி செய்ய முடியும். ஏனெனில் காலையில் பணிக்கு செல்ல வேண்டும் என்ற அவசரமோ அல்லது வேறு ஏதாவது வேலைகள் செய்ய வேண்டும் என்ற அவசரமோ இருக்கும். மாலையில் இந்த அவசரங்கள் இல்லாததே இதற்க்கு காரணம்.

உடல் ஒத்துழைப்பு :

மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்வதற்கு உடல் மிகுந்த ஒத்துழைப்பு தரும். இதனால் மிகுந்த ஆற்றலுடன் உடற்பயிற்சி செய்ய முடியும். இதனால் உடலுக்கு ஆரோக்கியமும், உற்சாகமும் கிடைக்கிறது.

மன அழுத்தம் :

மலை நேரங்களில் உடற் பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்தை போக்க முடியும். பணி நேரங்களில் அலுவலகங்களில் உள்ள வேலை பளுவினால் ஏற்படும் மன அழுத்தத்தை மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வதால் போக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உணவு உண்டபின் உடற்பயிற்சி :

காலை நேரங்களில் உடற்பயிற்சி செல்லும் முன் சிறிதளவு உணவாவது உட்கொள்ள வேண்டும். ஆனால் காலையிலேயே நம்மால் உணவு உட்கொள்ள முடியாது. இதனால் மாலை நேரங்களில், பழங்கள், தானியங்கள் உட்கொண்ட பின் உடற்பயிற்சி செய்தால் அது உடலுக்கு மிகவும் நல்லது.

உடற்பயிற்சி செய்யும் நேரம் :

உடற்பயிற்சி செய்வதற்கு மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை மிக சிறந்த நேரமாக கருதப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் ஆரோக்கியமான உறக்கம் வரும்.

அன்றாட வேலைகள் : 

மலையில் உடற்பயிற்சி செய்து விட்டு, இரவில் அயர்ந்து தூங்கினால், காலையில் அன்றாட வேலைகளை செய்வதற்கு உடலும், மனமும் நல்ல ஒத்துழைப்பு தரும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment