நீங்கள் மறுபிறவியை நம்புகிறீர்களா? பிரபல இயக்குனரின் அதிரடியான பதில்!

நீங்கள் மறுபிறவியை நம்புகிறீர்களா? பிரபல இயக்குனரின் அதிரடியான பதில்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். தர்பார் படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தை பார்ப்பதற்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலை கடலென திரண்டு வருகின்றனர். இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை பார்த்து விட்டு,சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல இயக்குனரும், லேடி சூப்பர் ஸ்டாரின் காதலருமான விக்னேஷ் சிவன், தர்பார் படத்தின் முதல் சிறப்பு காட்சியை பார்த்து விட்டு, அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து  தெரிவித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "நீங்கள் மறுபிறவியை நம்புகிறீர்களா? ஆம் நான் நம்புகிறேன். தலைவர் ரஜினிகாந்த் இளமை உத்வேகத்துடன் தோன்றுகிறார்." என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.