கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி ஒதுக்கிய திமுக எம்எல்ஏ

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார். 

பின் கொரோனா தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் .அவரது பதிவில்,தலைவர் ஸ்டாலின்   வழிகாட்டுதலின்படி கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொரொனா தடுப்பு பணிக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்க அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூபாய் 1,00,00,000 (ஒரு கோடி) வழங்கி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்..