அசுரன் படத்தில் அசுரத்தனமாக நடித்த தனுஷ்! பா.ரஞ்சித் புகழாரம்!

இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் முதன் முதலாக

By leena | Published: Oct 10, 2019 07:10 AM

இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் முதன் முதலாக இயக்கிய அட்டகத்தி என்ற படத்தை இயக்கியுள்ளார். இவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் கபாலி படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இந்த திரைப்படம் சாதிய அடக்குமுறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் இப்படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தமிழ்திரையில் அசுரன்கள் கதையை நிகழ்த்தி காட்டிய இயக்குனர் வெற்றிமாறன் தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டியிருக்கும் தனுஷ், நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி மற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ் நன்றிகள். உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!' என பதிவிட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc