படைவீடுகளில் களைகட்டிய தைப்பூசம்..! வெகு சிறப்பாக திருக்கல்யாணம்..!

தமிழகமெங்கும்  இன்று தைப்பூச விழாவானது வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு வாய்ந்த முருகனின் 3 படைவீடான பழனியில் தைப்பூச திருவிழாவானத்து கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக் தொடங்கியது. இவ்விழாவின் 6 நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி இரவு நடைபெற்றது.

மேலும் அன்று இரவு 7 மணிக்கு திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி முருக பஐமானுக்கு தொடர்ந்து 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. அதன் பின் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருண பூஜை மற்றும் பஞ்ச கவ்யபூஜை, வேதபாராயணம் மற்றும் சுப்ரமணியா யாகம், வாத்திய பூஜை நடைபெற்றது.

பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்கள்  உடன் வைக்கப்பட்ட சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரத்திருக்கு பிறகு ஆராதனையும் அதன் பின் கன்னிகா தானம், மாங்கல்ய பூஜையும் நடந்தது.இதனைத் தொடர்ந்து வள்ளி,தெய்வானைக்கு பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து சிறப்பு வாய்ந்த திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். அங்கு கூடி இருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா…! முருகனுக்கு அரோகரா…! என சரண கோஷத்தை உணர்ச்சி பொங்க எழுப்பினர்.

மாங்கல்யம் அணிவித்தை தொடர்ந்து மலர் மாலை மாற்றும் நிகழ்ச்சியானது  நடைபெற்றது. இதனை தொடர்ந்து  நடந்த தீபாராதனை, அர்ச்சனை, ரட்சை சாற்றுதல், என 16 வகை உபசாரம் மற்றும் வேதபாராயணம்-வேத மந்திரங்கள் முழங்க திருமுறை பாராயணம் உடன் வாத்திய கோஷம் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.

இதன் பின் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை சமேதராய் திருமண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதனை தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மேல் வெள்ளிரதத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி -தெய்வானையுடன் திரு உலா காட்சியானது  நடைபெற்றது.

author avatar
kavitha

Leave a Comment