மெட்ரோ ரயில்களை இயக்க தயாராகும் டெல்லி நிர்வாகம்!

கொரோனா வைரஸ் ஊரடங்கால் உலகமே தனது செயல்பாட்டை முடக்கி இருந்த நிலையில், தற்பொழுது மெட்ரோ ரயில் சேவைகளை துவங்க டெல்லி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்துக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏறக்குறைய 3 லட்சம் பேர் உயிரியிழந்து உள்ளனர். 

இருப்பினும் பல மாதங்களாக மத்திய அரசின் அறிவுரைப்படி இந்தியா முழுவது முழு ஊரடங்கு கடைபிடிக்க பட்டு வந்தது. இனி வரும் நாட்களில் பொருளாதார மேம்பாட்டுக்காக சில தளர்வுகள் அந்தந்த மாநில அரசின் அறிவுரைப்படி அமல் படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

 இனி வரும் நாட்களில் முக கவசத்துடன் மக்கள் வெளியில் செல்லவும், தனி மனித இடைவெளியை பயன்படுத்தி போக்குவரத்துக்கு செயல்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், முக்கியமான போக்குவரத்து சாதனமாகிய மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு அதிகளவில் தேவைப்படுகிறது. எனவே டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் தனது சேவையை தொடரும் என எதிர்பார்க்க படுகிறது. 

சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கை விட்டு மறு இருக்கையில் அமர்தல் போன்ற நடைமுறைகளுக்காக ஸ்டிக்கர் ஓட்டும் பணிகள் நடந்து கொண்டுள்ளது. 

இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை எனவும், வெளியாகியதும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டு தங்கள் சேவை தொடரும் எனவும் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

author avatar
Rebekal