டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் ..! வாக்குறுதிகளை வெளியிட்ட ஆம் ஆத்மி

  • டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
  • ஆம் ஆத்மி கட்சி தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.

இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டது .பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும்   ஜனவரி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது .வருகின்ற 21-ஆம் தேதி  மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஜனவரி 22 -ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலினை மற்றும் ஜனவரி 24 -ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.தேர்தலுக்காக 13,750 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி,பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதற்கு இடையில் ஆம் ஆத்மி கட்சி தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதிகளை காண்போம்..

  •  இலவச பேருந்து வசதிகள் மாணவர்களுக்கு செய்து தரப்படும்.அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் செய்யும் திட்டம் நீடிக்கும்.
  •  டெல்லி அரசு பள்ளிகளில் தரமான கல்வி உறுதி செய்யப்படும்.ஒவ்வொரு குழந்தைக்கும்  உலகத்தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்படும்.
  • 24 மணிநேர மின்விநியோகம் சீராக்கப்படும்.முதல் 200 யூனிட் மின்சாரத்துக்கு வழங்கப்பட்ட கட்டண விலக்கு நீடிக்கும்.
  • டெல்லி மக்களுக்கு வீடுதோறும் 24 மணிநேரமும் தூய்மையான குடிநீர் விநியோகம் செய்யப்படும்.வீடுதோறும் வழங்கப்படும் 20.000 லிட்டர் குடிநீர் திட்டம் தொடரும்.
  • டெல்லியில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சிசிடிவி கண்காணிப்புக் கேமாராக்கள் பொருத்தப்படும். பேருந்துகளில் பாதுகாவலா்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.