சொந்த மண்ணிலே முதல் உலகக்கோப்பை வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து..!

இன்றைய இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசீலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசீலாந்து அணி முதலில் பேட்டிஙை தேர்வு செய்தனர்.

நியூசீலாந்து அணியின் தொடக்க வீரர் குப்தில் ஆரம்பத்திலே சிறப்பாக விளையாட தொடங்கி 1 சிக்ஸ் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசி 19 ரன்கள் குவித்து கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். கேன் வில்லியம்சன் மற்றும் நிக்கோலஸ் ஜோடி சேர்ந்தனர். பிளெங்கெட் வீசிய பந்தில் வில்லியம்சன் 30 ரன்களுடன் வெளியேறினார். இதன் பின் களமிறங்கிய ரோஸ் டெய்லர் 15 ரன்னிலே தனது விக்கெட்டை இழந்தார்.

இதன் பின் நிக்கோலஸ் 55 ரன்கள், டாம் லதாம் 47 ரன்கள், ஜேம்ஸ் நிஷாம் 19, கொலின் டி கிராந்தோம் 16, மாட் ஹென்றி 4, டிரெண்ட் போல்ட் 1, மிட்செல் சான்ட்னர் 5 ரன்கள் குவித்துள்ளனர். 50 ஓவர்கள் முடிவில் நியூசீலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 241 ரன்கள் குவித்தனர்.

242 ரன்கள் பெற்றால் வெற்றி என்று களமிறங்கியது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜேசன் ராய் 17, பேர்ஸ்டோவ் 36, ஜோ ரூட் 7, இயோன் மோர்கன் 9 ரன்கள் குவித்து வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி சிக்கலை சந்தித்தது.

இதன் பின் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் நிதானமாக விளையாடி இருவரும் அரைசதம் விளாசினர். இவர்களின் பாட்னர்சிப்பை பிறிக்க போராடிக் கொண்டிருந்த போது லோக்கி பெர்குசன் பட்லரின் விக்கெட்டை பெற்றார். கிறிஸ் வோக்ஸ் ஸ்டோக்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் கிறிஸ் வோக்ஸ் 2 ரன்கள் குவித்து பெர்குசன் பந்தில் தனது விக்கெட் இழந்தார். இதன் பின் பிளெங்கெட் 10 ரன்னில் வெளியேறினார்.

கடைசி ஓவரில் 15 ரன்கள் அடிக்கும் சூழல்  ஏற்ப்பட்ட போது ஸ்டோக்ஸ் முதல் இரண்டு பந்துகளை விணாக்கினார். மூன்றாவது பந்தில் சிக்ஸ் அடித்தார். நான்காவது பந்தில் 2 ரன்கள் குவித்தார் அதுமட்டுமின்றி ஓவர்த்ரோவில் 4 ரன்கள் கிடைத்தது. கடைசி 2 பந்தில் ஓவ்வொரு ரன்கள் குவித்து போட்டியை சமம் செய்தார்.

இதன் பின் நடைப்பெற்ற சூப்பர் ஓவரில் டிரெண்ட் போல்ட் வீசிய ஓவரில்  ஸ்டோக்ஸ் (8) மற்றும் பட்லர் (7) களமிறங்கி 15 ரன்கள் குவித்தனர். பிறகு ஆர்ச்சர் வீசிய முதல் 3 பந்தில் 11 ரன்களும் கடைசி மூன்று பந்தில் 4 கொடுத்தார். இதில் நிஷாம் 14 ரன்கள் மற்றும் குப்தில் 1 ரன் எடுத்தனர். சூப்பர் ஓவரும் சமமானதால் அதிக பவுண்டரிகள் அடித்த அணியாக இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாத அறிவித்தனர். இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

author avatar
Vidhusan