பிரபல நடிகையை கடத்தி சென்று திருமணம் செய்வேன் என கூறிய கிரிக்கெட் வீரர்!

தமிழ் சினிமாவில் காதலர் தினம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் சோனாலி.இவர் தமிழ் தவிர்த்து பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சில ஆண்டுகளாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் நடித்த English Babu Desi Mem என்ற படத்தை பார்த்த பிரபல பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் சோனாலி இவர் மீது காதல் கொண்டுள்ளார்.
மேலும் இவர் அவரது அறை முழுக்க சோனாலியின்  புகைப்படங்களை வைத்துள்ளார்.இந்நிலையில் அவர் காதலை சோனாலியிடம் பிரபோஸ் செய்யும் போது அவர் மறுத்துவிட்டால் கட்டாயமாக கடத்தி திருமணம் செய்வேன் என கூறியுள்ளார்.
இதனை பற்றி சோனாலியிடம் கேட்டதற்கு அவர் நான் அவரை பார்த்தது கூட கிடையாது நான் கிரிக்கெட் ரசிகர் கிடையாது அவர் என்னுடைய ரசிகராக இருப்பதற்கு என்னால் நன்றி மட்டுமே கூற முடியும் என்று பதிலளித்துள்ளார்.