23,000-ஐ தாண்டியது அமெரிக்காவில் கொரோனா பலி.! ஒரே நாளில் 1,535 பேர் உயிரிழந்தனர்.!

உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 19 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், உலக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க 19,25,440 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,19,718 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 4,51,884 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
உலக வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அங்கு இதுவரை 5,87,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,644 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 36,948 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.