#Breaking : சென்னையில் 86 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.!

சென்னையில், இன்று ஒரே நாளில்  1,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது  85,859 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில்  சென்னையில் இன்று ஒரே நாளில்  1,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  85,859 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 69,382 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 15,042  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, சென்னையில் ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,434  ஆக உயர்ந்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.