தமிழகத்தின் கொரோனா நிலவரம் – பீலா ராஜேஷ்

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 485 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது. இன்று உறுதி செய்யப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள் என்றும் ஒருவர் துபாய் சென்று வந்தவர் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் கொரோனா நிலவரம்:

  • இதுவரைக்கும் 90,824 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளார்கள்.
  • அரசு கண்காணிப்பில் 127 பேர் இருக்கின்றார்கள்.
  • கண்காணிப்பு முடிந்தவர்களின் எண்ணிக்கை 10,814 பேர்.
  • இதுவரைக்கும் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் 4,612
  • அதில் 571 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
  • ஐசோலேசன் வார்டில் 1848 பேர் இருக்கின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 8 பேர் குணமடைந்துள்ளார்கள்.
  • தனியார் மருத்துவமனையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 7. 
  • கவலைக்கிடமாக இருப்பவர்கள் எண்ணிக்கை 7.
  • டெல்லி சென்று திரும்பியவர்களில் சுமார் 1246 பேர் மருத்துமனைக்கு வந்துள்ளார்கள்.
  • இதுவரைக்கும் 38,88,896 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளார்கள். 
  • 15 ஆயிரம் களப்பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 
author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்