சென்னையில் ஒரே நாளில் இரண்டு முக்கிய இடத்தில் குழந்தைகள் கடத்தல்! தேடுதல் வேட்டையில் போலீசார்!

சென்னையில் ஒரே நாளில் இரண்டு முக்கிய இடத்தில் குழந்தைகள் கடத்தல்! தேடுதல் வேட்டையில் போலீசார்!

  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அசாம்  சேர்ந்த 2 வயது ரக்ஷிதா எனும் பெண் குழந்தை கடத்தப்பட்டது. 
  • சென்னை அரசு மருத்துவமனையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 8 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஓரே நாளில் இரண்டு வெவ்வேறு முக்கிய இடங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. முதலில் அசாம் மாநிலத்தில் இருந்து பார்ஸீனா என்கிற பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் சென்னை வந்துள்ளார். உடன் அவரது நண்பர் ஒருவரும் வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலையில் வந்திறங்கிய அவர்கள் ரயில்நிலையயில் குழந்தைகளுடன் படுத்துறங்கியுள்ளனர். பின்னர் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்க்கும் போது, 2 வயது நிரம்பிய ரக்ஷிதா என்கிற பெண் குழந்தையை மட்டும் காணவில்லை. உடனே பதறிப்போன அவர்கள் ரயில் நிலையத்தில் தேடி பார்த்துவிட்டு, பின்னர், ரயில்நிலைய போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அதேபோல, சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்துவந்த ஜானி - நந்தேஷா தம்பதியினர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. அவர்களிடம் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் அந்த 8 மாத ஆண்குழந்தையை நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். நம்பி அந்த இளம் பெண்ணுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளார். குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும் என கூறி மருத்துவமனைக்கு கூட்டி சென்ற அவர், அந்த  8 மாத குழந்தையுடன் தப்பித்து விட்டார். அதன் பின்னர் அந்த பெண்ணையும், குழந்தையும் தம்பதியினர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தேடி பார்த்துள்ளனர். ஆனால், குழந்தையுடன் அந்த இளம் பெண் தப்பித்துவிட்டார். இச்சம்பவம் குறித்தும் மஹாராஷ்டிரா தம்பதியினர் போலீசில் புகாரளித்துள்ளனர். ஒரே நாளில் சென்னையில் இருவேறு முக்கிய இடங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளது சென்னை மக்களிடையே அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.

Latest Posts

நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - எந்த விடுமுறையும் கிடையாது!
அபுதாபியில் அக்டோபர் 1 புதிய போக்குவரத்து விதிமுறைகள்.!
ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங்..!
#Breaking: அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி
உத்தரபிரதேசத்தில் "கோவாக்சின்" தடுப்பூசியின் 3 கட்ட சோதனை தொடக்கம்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் வருங்கால கணவரை பார்த்தீர்களா..?
இரண்டாவது தடுப்பூசி விரைவில் பதிவு செய்யப்படும்..புதின்.!
ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம்: அக்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - யுஜிசி
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!
பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சிறுமியின் வங்கி கணக்கில் ரூ .10 கோடி.?