தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி!!விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர் பழனிச்சாமி!! 

மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி-தேமுதிக-

By venu | Published: Mar 16, 2019 01:53 PM

  • மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி-தேமுதிக- தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.
  • இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் பழனிச்சாமி  மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜு,கடம்பூர் ராஜு,விஜயபாஸ்கர் சந்தித்தனர்
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி-தேமுதிக- தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.குறிப்பாக தேமுதிகவுடன்  தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் பழனிச்சாமி  மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜு,கடம்பூர் ராஜு,விஜயபாஸ்கர் சந்தித்தனர்.தேமுதிக தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில்  இந்த சந்திப்பு நடைபெற்றது.ஏற்கனவே துணை முதமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc