மாமல்லபுரத்தில் சீனாவை சேர்ந்த 4 பேர் கைது..! காரணம்...?

மாமல்லபுரத்தில் நேற்று(அக்.11)சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர

By Fahad | Published: Mar 28 2020 11:01 AM

மாமல்லபுரத்தில் நேற்று(அக்.11)சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தில் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிலையில், மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிஙை காண பொது மக்கள் காத்திருந்தனர். இந்த கூட்டத்தில் சீனர்களும் பங்கேற்றனர். இதில் சீனர்கள் நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நான்கு சீனர்களிடமும் உரிய அடையாள அட்டை ஏதும் இல்லாததால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்தனர். இவர்களை மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News From chenai police