2021 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஆயத்தப்பணிகள் தொடக்கம்!

நாட்டில் 16 வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆயத்தப்பணிகள் துவங்க முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றனர். இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாணமை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. இந்நிலையில், 10 வருடங்கள் கழித்து வரும் 2021 ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் முன்னதாக மாதிரி மக்கள் தொகை  கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது அதன் படி, தமிழகத்தில் சிவகங்கை, நீலகிரி மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ள வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.