உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த சிதம்பரம் ! சிபிஐ கேவியட் மனு தாக்கல்

ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ  கேவியட்

By venu | Published: Aug 21, 2019 12:48 PM

ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ  கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா விசாரிக்க மறுப்பு தெரிவித்து தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றுவதாக தெரிவித்தார். ஆனால் தலைமை நீதிபதி அமர்வும் உடனே  இந்த மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால் சிதம்பரம் மனுவை உடனே விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்து விட்டது.இந்த நிலையில் சிபிஐ  சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனுவில், எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்க கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc