26 வருட சாதனையை முறியடித்த கேப்டன் கோலி !

இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெஸ்ட்இண்டீஸ் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய தவான் 2 ரன்னில் வெளியேற பின்னர் கோலி களமிறங்கினர்.

இப்போட்டியில் கோலி 19 ரன்கள் எடுத்தால்  பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவித் மியான் தத் 26 வருட சாதனையை முறியடிப்பர் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோலவே இப்போட்டியில் கோலி 19 ரன்கள் கடந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவித் மியான் தத் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 1930 ரன்கள் அடித்தது அதிகபட்ச ரன்னாக 26 வருடமாக இருந்தது.

இன்றைய போட்டிக்கு முன் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விராட் கோலி 1912 ரன்கள் எடுத்து இருந்தார்.இன்றைய போட்டியில்  19 ரன்கள் கடந்து ஜாவித் மியான் தத்தின் சாதனையை முறியடித்து உள்ளார்.

author avatar
murugan