நடுத்தர மக்களை மனதில் கொள்ளாமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தும் பட்ஜெட்-மு.க.ஸ்டாலின்

நடுத்தர மக்களை மனதில் கொள்ளாமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தும் பட்ஜெட்-மு.க.ஸ்டாலின்

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த நிலையில் ,மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை என்று திமுக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   இன்று 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன்   தாக்கல் செய்தார்.இந்நிலையில் இது  குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை.திட்டங்களும் கிடைக்கவில்லை .ஆதிச்சநல்லூர் அகழாய்வு தவிரவேறு எந்த அறிவிப்பும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை.அரசுக்கு தொலைநோக்கு பார்வையும் இல்லை. தொலைந்துபோன பொருளாதாரத்தை மீட்க வழியும் தெரியவில்லை.   இந்தியாவுக்கு ஏற்றம் தரும் பட்ஜெட் இல்லை. ஏமாற்றம் தரும் பட்ஜெட் இது. நடுத்தர மக்களை மனதில் கொள்ளாமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தும் பட்ஜெட் இது. மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் மனநிறைவைத் தராத பட்ஜெட்.நிதிநிலை அறிக்கை முழுவதும் கார்ப்பரேட்களின் மீதான அக்கறையை நேரடி ஒலிபரப்பு செய்கிறது .வேலைவாய்ப்பு இழப்பை தடுத்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாகும் திட்டங்களும் இல்லை .மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு திமுக சார்பில் மன நிறைவின்மையை தெரிவிக்கிறேன்.

Latest Posts

ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி..!
ரோஹித் அதிரடி.. 195 ரன்கள் குவித்த மும்பை ..!
#BREAKING: மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி காலமானர்.!
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 5,376 பேருக்கு கொரோனா உறுதி.!
அசாம் போலீஸ் ஆட்சேர்ப்பு தேர்வு குறித்து முதல்வர் சர்பானந்தா சோனோவால் விளக்கம்.!
வேளாண் மசோதாக்கள் -குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த குலாம் நபி ஆசாத்
தீபிகா படுகோன் 25 ஆம் தேதி ஆஜராக சம்மன்..!
#IPL2020 : டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச முடிவு
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை..!
7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை