#Breaking : மறைமுகத் தேர்தல் – வீடியோ பதிவிற்கு தடை

  • மறைமுக தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
  • உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.

ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது .அதில் அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணியே அதிக இடங்களில் கைப்பற்றியது.

இதனையடுத்து நாளை மாவட்ட ஊராட்சி தலைவர் ,ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மறைமுக தேர்தலில் வீடியோ பதிவை செய்யவேண்டும் என திண்டுக்கல்லைச் சேர்ந்த  லலிதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில்  விளக்கம் அளிக்கப்பட்டது .அந்த விளக்கத்தில் ,குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது

பின்னர் அனைத்து இடங்களிலும் ஏன் வீடியோ பதிவு செய்யக்கூடாது என்று  கேள்வி எழுப்பியது. மறைமுக தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில்தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதி  அளிக்கப்பட்டது.மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இன்றே அறிவுறுத்தல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இறுதியாக வீடியோ பதிவு தொடர்பாக ஜனவரி 21- ஆம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இதற்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இதை விசாரித்த நீதிமன்றம் , உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.மேலும்  உயர்நீதிமன்ற கிளை பதிவாளர் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்தது.