பெரும்பான்மையை இழந்தார் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக   பிரிட்டன் முடிவு செய்தது. இதற்காக ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் தெரசாமே தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனால் இழுபறி நீடித்து வந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரசாமே தெரிவித்தார்.

பின் தெரசா மே ராஜினாமா செய்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். இன்று இவர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பிரிட்டன் நாடாளுமன்றத்தில்  நடைபெற்று வந்த நிலையில் ஆளும் கன்செர்வேட்டிவ் கட்சி எம்.பி. பிலிப் லீ சுதந்திர ஜனநாயக  கட்சியில் இணைந்ததால்  பெரும்பான்மையை இழந்தார் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன்.