தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் அவலங்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடி ப்ரியன்ட் நகரை சேர்ந்தவர் மேத்யு இவர் தனது

வீட்டுனறுகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது குடிபோதையில் வாகனத்தை ஓட்டிவந்த இருவர் மேத்யு  மீது வலது தொடையில் மோதியுள்ளனர் இதனால் நிலைக்ளைந்து கீழே விழுந்துள்ளார் இதனால் அவரது வலது தொடை எலும்பு முறிந்தது ,இதனை அடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் மனவேதனைக்கு அடையும் படி நடந்துள்ளனர் .அவரது காலில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வடிந்துள்ளது  அதை தொடைக்கும் படி குடும்பத்தினர் கேட்டுள்ளனர் இதற்க்கு அங்கு வேலை செய்பவர்கள் எங்கள் வேலை இதுவல்ல என்று சொல்லிவிட்டு கைபேசியில் சாட் செய்துள்ளனர் ,இதுமட்டுமா அங்கு வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் கையுட்டு பெற்றுவிட்டு வேலை செய்துள்ளனர்,  தனியார் மருத்துவமனைக்கு சிபாரிசும் நடக்கிறது .டெங்குவை ஒழிக்க வேண்டும் என்று கூறிவரும் அரசு இதுபோன்ற கிழ்த்தரமாக செயல்படும் அரசு மருத்துவமனை உழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கும் என்று தூத்துக்குடி மாநகர இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது ..
author avatar
Dinasuvadu desk

Leave a Comment