சராஹா செயலியை பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா.?

சராஹா செயலி ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் மிக எளிமையாக கிடைக்கிறது, இதன் அளவு  5mb  மிக விரைவில் டவுன்லோடு செய்ய முடியும்.இந்த சராஹா ஆப் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது எனக் கூறப்படுகிறது, சிலர் இந்த ஆப் பாதுகாப்பானது இல்லை எனக் கருத்து தெரிவித்துள்ளனர். 
சராஹா ஆப் பொறுத்தவரை சவுதி அரேபியாவில் உள்ள மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் பல லட்சம் பேர் இந்த சராஹா ஆப் பயன்பாட்டை டவுன்லோட் செய்துள்ளனர்.
நீங்கள் இந்த சராஹா ஆப் பயன்படுத்தினால் உங்கள் ப்ரோஃபைலினை யார் வேண்டுமானாலும் பார்க்கு வசதி இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது, அதன்பின் மற்றவற்களின் ப்ரோஃபைல்களை பார்த்து மெசேஜ் அனுப்பும் வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

author avatar
Castro Murugan

Leave a Comment