தமிழக மக்களுக்கு இதுவரை ரஜினி,கமல் என்ன செய்தார்கள் ஆவேசப்படும் அமைச்சர்ர் செல்லூர் ராஜி

திருப்பதி: நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மக்கள் துன்பப்பட்ட காலங்களில் என்ன செய்தார்கள் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திருப்பதி கோயிலுக்குச் சென்றார். அங்கு சாமி கும்பிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, கமல் மற்றும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்குப் பதில் அளித்த அமைச்சர், தமிழக மக்கள் துயரடைந்த போது ரஜினியும் கமலும் என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பினார். அவர்கள் இருவரும் அரசியலுக்கு வருவதால் அதிமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி விட முடியாது என்று அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில், நடிகர்கள் சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி. ராஜேந்தர் ஆகியோர் கடையை ஆரம்பித்து எந்த நிலையை அடைந்தார்கள் என்று மக்களுக்குத் தெரியும். அவர்களை மக்கள் புறக்கணித்தார்கள். அதே போன்று ரஜினியையும், கமலையும் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
யார் கட்சியைத் தொடங்கினாலும் மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை வர வேண்டும் என்பது மட்டும்தான் முக்கியம் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Leave a Comment