சூப் குடிப்பதனால் உங்கள் உடலில் ஏற்ப்படும் நன்மைகள் ..!

மழை காலங்களில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக காய்ச்சல் வருவதை நாம் தவிர்க்க முடிவதில்லை. காய்ச்சல் என்பது உடல் சூட்டை மட்டும் கொடுக்காது தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் கொடுக்கிறது.இதனை சரி செய்ய சூப்  மிக சிறந்த பலன்களை கொடுக்கும்.


சூப் செய்யும்முறை:

சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
பட்டை – சிறிதளவு
வெள்ளை பூண்டு – 10 பற்கள்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தனியா – சிறிதளவு
கிராம்பு – 7
தண்ணீர் – 750 ml
உப்பு – தேவையான அளவு
ஒரு பிரஷர் குக்கரை எடுத்து அடுப்பில் வைக்கவும். குக்கரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 ஸ்பூன் சீரகத்தையும், மிளகையும், 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும், தனியாவையும் போட வேண்டும். இந்த கலவையை நன்கு கிளறவும்.
பிறகு ஒரு 15 நொடிகளில் இருந்து 20 நொடிகளுக்கு பிறகு சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இஞ்சி துண்டையும், தேவைக்கேற்ப உப்பையும் போட்டு அந்த கலவையை நன்கு கிளறவும்.
பிறகு அந்த திரவத்தை தனியே எடுத்து, அதனுள் இருக்கும் இஞ்சி முதலான பொருட்களை நன்கு மசிய வைக்க வேண்டும். பிறகு அந்த திரவைத்தை ஒரு வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது அந்த திரவத்துடன், சிறிதளவு தேன் கலந்தால் நம் உடலைக் காக்கும் சூப் ரெடி.

இந்த சூப்பை காலை மாலை மற்றும் இரவு வேளைகளில் 3 நாட்களுக்கு பருகுவதால், உடல் வலி பறந்து போய் விடும். மிளகு, இஞ்சி போன்றவை சளி தொல்லைக்கு சிறந்தது என்பதால், சளி மூக்கின் வழியாக நீராக வந்து விடும். இந்த சூப்பை குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment