கதிராமங்கலம் மக்கள் திட்டவட்டம்

ஓஎன்ஜிசி நிறுவனத்தை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட் டுள்ள 10 பேரை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என கதிராமங்கலம் மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும். இதற்காக போராடிய தால் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கதிராமங்கலம் அய்யனார் கோயி லில் கிராம மக்கள் 3-வது நாளாக நேற்றும் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். அங்கேயே விறகு அடுப்பில் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.
போராட்டத்திற்கு அதரவு தெரிவித்து  (நாகப்பட்டினம் ,திருவண்ணாமலை ,திருவாரூர் ,தஞ்சாவூர்) இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த சுமார் 10000 மாணவர்கள்  தங்களது கல்லூரி வளாகங்களில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

போராட்டக் குழு

இதற்கிடையே, திருவிடைமரு தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ செ.ராமலிங்கம், திருப்பனந்தாள் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கோ.ரவிச்சந்திரன் ஆகி யோர் போராட்டம் நடைபெற்ற இடத் துக்கு நேற்று வந்தனர். பொது மக்களிடம் அவர்கள் பேசும்போது, “கதிராமங்கலத்தில் தற்போது உள்ள நிலைமை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என கடந்த 6-ம் தேதியே தமிழக சட்டப்பேரவையில் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடிதம் கொடுத் துள்ளனர்.
ஆனால், இதுவரை அதற்கு அரசிடம் இருந்து பதில் இல்லை. எனவே, பொதுமக்கள் ஒரு போராட்டக் குழுவை அமைத் தால்தான், கோரிக்கையை உரிய இடத்தில் சொல்ல முடியும்” என்றனர்.

கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

பின்னர், அங்கிருந்து மயி லாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மயிலாடுதுறை போலீஸார், மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனை வரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
author avatar
Castro Murugan

Leave a Comment