மருத்துவருக்கும் நோயாளிகளுக்கும் உதவும் ஸ்மார்ட்போன் செயலி!!!

“IVH patient care” என்ற இந்த செயலி மருத்துவர்களுக்கும் தங்களுடைய நோயாளிகளின் விபரங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொள்ள உதவுகிறது. இந்த செயலி மூலம் மருத்துவர்களை நேரடியாக சந்திக்க முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் இந்த செயலி மூலம் தங்களுடைய நோய் குறித்தும், ஏற்கனவே எடுத்து கொண்ட சிகிச்சை குறித்த விபரங்களையும் மருத்துவர்களிடம் தெரிவித்து தற்போதைய சிகிச்சை முறை குறித்து தெரிந்து கொள்ளலாம். மருத்துவர்கள் நோயாளியின் நோய் குறித்த முழு விபரத்தை தெரிந்து கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை நோயாளிகளுக்கு வழங்கலாம் . ஒருமுறை வந்த நோயாளிகள் பல காரணங்களால் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நோய் குணமாகும் வரை வருவதில்லை. அருகில் உள்ள வேறொரு மருத்துவரையோ அல்லது சிகிச்சையை கைவிட்டொ விடுகின்றனர். ஆனால் இந்த செயலி மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு நீங்காமல் பார்த்து கொள்கிறது இந்தியா வெர்ட்டியுவல் ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனம் இந்த “IVH patient care” செயலியை வடிவமைத்துள்ளது. இந்த செயலி ஒரு நோயாளிகளுக்கு தரமான, முழுமையான சிகிச்சைக்கு பேருதவி செய்கிறது. மருத்துவருக்கும் நோயாளிகளுக்கும் நோய் குணமாகும் வரை ஒரு பந்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த பந்தத்தை இந்த செயலி கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது என்று தருண் சஹானி மேலும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செயலி மருத்துவர்கள் ஒரு குறிப்பிட்ட நோய் குறித்த நிபுணர்களிடமும் தங்களுடைய நோயாளியின் நோய் குறித்த சந்தேகங்களையும் தெளிவுபடுத்த உதவுகின்றது என்பது மேலும் ஒரு சிறப்பு ஆகும் இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்து பேசிய இந்தியா வெர்ட்டியுவல் ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் ஸ்வதீப் ஸ்ரீவட்சவா கூறியபோது, ‘ஒரு நோயாளியை தங்களால் கவனிக்க முடியவில்லை என்றால் உடனே அந்த நோயாளியை வேறொரு மருத்துவமனைக்கு மாற்றுவது என்பது மருத்துவர்களுக்கு ஒரு சவாலான காரியம். ஆனால் இந்த செயலி அதை எளிமையாக்குகிறது. ஒரு நோயாளிக்கு எந்தவிதமான மருத்துவரின் சிகிச்சை தேவையோ, அந்த மருத்துவரை இந்த செயலி மூலம் உடனே தொடர்பு கொண்டு அவருடைய மருத்துமனையில் சிகிச்சை பெற உதவி செய்யும் என்று ஸ்வதீப் ஸ்ரீவட்சவா மேலும் கூறினார். 

author avatar
Castro Murugan

Leave a Comment