நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளது’ என பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்..!

பாட்னா: ‛நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளது’ என பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், என பா.ஜ.,வை அவர் விமர்சித்துள்ளார். என்ன காரணம் என்பதை பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த லாலு தெரிவித்ததாவது: பெங்களூருவில் குஜராத் காங்., எம்.எல்.ஏ.,க்களை தங்க வைத்ததற்காக கர்நாடக காங்., அமைச்சர் வீடுகளில் மத்திய அரசு சோதனை நடத்துகிறது. அதானி போன்ற பெரு நிறுவனங்களை மத்திய அரசு ஏன் கண்டுகொள்வதில்லை? வெளிநாடுகளில் ரகசிய முதலீடு செய்ததாக ‛பனாமா ஆவணங்களில் குறிப்பிட்டிருந்த, ஐஸ்வர்யா ராய், ராமன் சிங் மகன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட 424 பேரின் வீடுகளில் சோதனை நடத்தாததன் காரணம் தான் என்ன? 75% நெருக்கடி நிலை: நாட்டில், அறிவிக்கப்படாத, 75 சதவீத நெருக்கடி நிலை, அமலில் உள்ளது. எதிர்க்கட்சிகளை ஒடுக்க, மத்திய அமைப்புகளான வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ
ஆகியவற்றை, மோடி அரசு,thanathu கைப்பாவையாக பயன்படுத்துகிறது. ஆனால், பா.ஜ.,வில் உள்ளவர்கள் மீது, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தும், அவர்கள் சுதந்திரமாக வலம் வருகின்றனர். நம்பிக்கை: வரும் 8ம் தேதி பீஹார் வரும் சரத் யாதவ், மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து அடுத்த லோக்சபா தேர்தலில் மோடியை எதிர்க்க உதவி செய்வார் எனும் நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

author avatar
Castro Murugan

Leave a Comment