370-வது சட்டப்பிரிவை பாஜக அரசு நீக்கிய விதம் தவறானது -முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

370-வது சட்டப்பிரிவை பாஜக அரசு நீக்கிய விதம் தவறானது -முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை பாஜக அரசு நீக்கிய விதம்தான் தவறானது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மும்பையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு இறங்கு முகத்தில் செல்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் தொடர்ந்து உற்பத்தி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை பாஜக அரசு நீக்கிய விதம்தான் தவறானது. 370வது பிரிவு நீக்கம் தற்காலிகமானது என நம்புகிறோம் என்று   மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.