தமிழகத்தில் ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்-தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் சமீபத்தில்  மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றிபெற்றது.அதிமுக கூட்டணி 1 இடத்தில் மட்டும் வெற்றிபெற்றது.இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும் ,அதிமுக 9 இடங்களிலும் வெற்றிபெற்றது.

இந்நிலையில்   தமிழகத்தை சேர்ந்த 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று  தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் ‘மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கு ஜூலை 1ந் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெறும். ஜூலை 8-ஆம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும். போட்டி இருந்தால் ஜூலை 18-ஆம்  தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வேரை வாக்குப் பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.