ஒரு வருடத்தில் 50 சிக்ஸர் மேல் அடித்த வீரர்களில் கிறிஸ் கெய்ல் முதலிடம்!

நடப்பு உலகக்கோப்பை இங்கிலாந்து வேல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.இந்த உலகக்கோப்பை தொடரில் பத்து அணிகள் விளையாடி வருகிறது.ஒவ்வாரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும்.
இறுதியாக முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதியை பெறும். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு உலகக்கோப்பையில்  6 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்று , 4 போட்டிகளில் தோல்வியை தழுவியது.

ஒரு போட்டி மழையால் ரத்தானது.இதனால் புள்ளி பட்டியலில் தற்போது 3 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது.வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் சில போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தை காட்டி உள்ளார்.
இந்நிலையில் ஒரு வருடத்தில் 50 சிக்ஸர் மேல் அடித்த வீரர்களின் பட்டியல் வெளியாகி வருகிறது.அதன் படி 2019-ம் ஆண்டு அதிக சிக்ஸர் அடித்த வீரர்களில் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்து உள்ளார்.
இதுவரை கிறிஸ் கெய்ல்(2009, 2012, 2019)ஆகிய  மூன்று ஆண்டு  50 சிக்ஸர் அடித்து முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ரோஹித் , அஃப்ரிடி உள்ளனர்.இவர்களை தவிர வேறு யாரும் இதுவரை ஒருவருடத்தில்  50 சிக்ஸர் அடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கெய்ல் – 3 டைம்ஸ் (2009, 2012, 2019) *
ரோஹித் – 2 டைம்ஸ் (2017, 2018)
அஃப்ரிடி – 2 டைம்ஸ் (2002, 2005)
 

author avatar
murugan