அயோத்தி வழக்கு ..!இந்து அமைப்பில் தாக்கல் செய்த புத்தகத்தை கிழித்த வழக்கறிஞர்..!

அயோத்தி  வழக்கில் இன்று  இறுதி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

By murugan | Published: Oct 16, 2019 12:50 PM

அயோத்தி  வழக்கில் இன்று  இறுதி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் அயோத்தி வழக்கில் இந்து அமைப்பில் தாக்கல் செய்த புத்தகத்தை  வழக்கறிஞர் கிழித்தெறிந்ததால் பரபரப்பு  ஏற்பட்டது.இஸ்லாமிய அமைப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான் இந்து அமைப்பில் சார்பில் தாக்கல் செய்த புத்தகத்தை கிழித்து எறிந்தார். ராஜீவ் தவான் கோபமாக வாதத்தை முன் வைத்தார்.உடனே  நீதிபதி வழக்கறிஞர்கள் இப்படி நடந்துகொண்டால் எழுந்து சென்று விடுவோம் என நீதிபதி கண்டித்து உள்ளார்.அயோத்தி வழக்கில் விசாரணை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் இது போன்று நடந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc