ரிஸ்க்கான உடற்பயிற்சியால் காயமடைந்த அருண் விஜய்.!

ஒர்க்கவுட் மிஷனில் சாகச உடற்பயிற்சி ஒன்று செய்கையில் திடீரென அதிலிருந்து

By ragi | Published: May 17, 2020 06:10 PM

ஒர்க்கவுட் மிஷனில் சாகச உடற்பயிற்சி ஒன்று செய்கையில் திடீரென அதிலிருந்து தவறி விழுந்து இரண்டு முழங்கால்களிலும் படுகாயம் அடைந்தது. இது குறித்து அவர் கூறுகையில், இதை ஒருபோதும் செய்ய வேண்டாம், ஒர்க்கவுட்டிற்கு முன்பு ஒர்க்கவுட் இயந்திரங்களை சரிப்பார்க்கவும் என்றும், கீழே விழுந்ததால் முழங்கால்கள் இரண்டு ஒரு வாரமாக வழங்கியிருந்ததாகவும் கூறியுள்ளார்.

அருண் விஜய், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். கடந்தாண்டு இவர் நடிப்பில் குற்றம் 23,செக்க சிவந்த வானம், தடம் போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.சமீபத்தில்வெளியான கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க இருப்பதோடு வா டீல் என்ற படமும், அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். 

இந்த நிலையில் தற்போது அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சாகச வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு ஒர்க்கவுட் மிஷனில் சாகச உடற்பயிற்சி ஒன்று செய்கையில் திடீரென அதிலிருந்து தவறி விழுந்து இரண்டு முழங்கால்களிலும் படுகாயம் அடைந்தது. இது குறித்து அவர் கூறுகையில், இதை ஒருபோதும் செய்ய வேண்டாம், ஒர்க்கவுட்டிற்கு முன்பு ஒர்க்கவுட் இயந்திரங்களை சரிப்பார்க்கவும் என்றும், கீழே விழுந்ததால் முழங்கால்கள் இரண்டு ஒரு வாரமாக வழங்கியிருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும்  நல்ல வேளை வீழ்ச்சியில் தலையில் காயம் ஏற்படவில்லை. அதற்காக கடவுளுக்கு நன்றி என்றும், பயிற்சியாளர் இல்லாமல் ஒருபோதும் இதுபோன்ற உடற்பயிற்சியை செய்யாதீர்கள் என்றும் கூறியுள்ளார்.

 

Step2: Place in ads Display sections

unicc