ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டை பறித்த வீரர்களில் இந்திய அணி வீரர்கள் 3 பேர் இடம் பிடித்தனர்!

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணி உடன்  மோதியது . இப்போட்டி  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்  மைதானத்தில் நடைபெற்றது.போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷாமிக் 4 விக்கெட்டையும் , வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ,சுழல் பந்து வீச்சாளர் சாஹல் இருவரும் தலா இரு விக்கெட்டையும் பறித்தனர்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டை பறித்த வீரர்களின் பட்டியலில் இந்திய அணியை சார்ந்த மூன்று வீரர்கள் இடம் பிடித்து உள்ளனர்.இந்த வருடம் நடந்த ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டை பறித்த வீரர்களில் நியூஸிலாந்து அணியை சார்ந்த ட்ரெண்ட் போல்ட் 30 , லாக்கி பெர்குசன் 29 விக்கெட்டை பறித்து முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.
மூன்றாம்  இடத்தில் 28 விக்கெட்டை பறித்து ஆஸ்திரேலிய அணியை சார்ந்த பேட் கம்மின்ஸ் உள்ளார்.அடுத்த மூன்று இடத்தில் இந்திய அணியை சார்ந்த  முகமது ஷாமிக் , புவனேஷ்வர் குமார், உஸ்வேந்திர சாஹல் ஆகியோர் உள்ளனர்.இப்பட்டியலில் இந்திய அணியின் வீரர்களின் ஆதிக்கமே அதிகம் உள்ளது.
30-ட்ரெண்ட் போல்ட்
29 -லாக்கி பெர்குசன்
28 – பேட் கம்மின்ஸ்
25 – முகமது ஷாமிக்
24 – புவனேஷ்வர் குமார்
24 -உஸ்வேந்திர சாஹல்

author avatar
murugan