திருடர்களை விரட்டியடித்த வீர தம்பதியை வாழ்த்திய பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்!

திருநெல்வேலி கடையத்தில் வயதான தம்பதியினரானசண்முகவேல் - செந்தாமரையும். தனி

By manikandan | Published: Aug 13, 2019 07:02 PM

திருநெல்வேலி கடையத்தில் வயதான தம்பதியினரானசண்முகவேல் - செந்தாமரையும். தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வீட்டில் நேற்று முன்தினம், இரு திருடர்கள் முகமூடி அணிந்து, அவர்களை அரிவாளால் தாக்கி திருட முயற்சித்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் தம்பதியினர் துரிதமாக செயல்பட்டு, திருடர்கள் கையில் அரிவாள் வைத்திருந்ததையும் பொருட்படுத்தாமல், கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து அடித்து திருடர்களை விரட்டிவிட்டனர். இருந்தும் செந்தாமரை கழுத்தில் இருந்த சங்கிலியை திருடன் பறித்து சென்றான். ஆயுதம் ஏந்திய திருடர்களை கண்டு எந்தவித பயமும் இன்றி, அடித்து விரட்டிய இந்த வீர தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த விடீயோவை பகிர்ந்து அவர்களின் வீரத்தை பாராட்டுவதாக பதிவிட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc