அள்ள,அள்ள குறையாமல்..!! அள்ளி வரம் அருளும் அட்சய திருதியை…!! 

தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.

காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது.

மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியாக போற்றப்படும் கங்கை நதியை சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்த நாளில்தான் எனக் கூறப்படுகிறது. சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

அட்சயா” எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது என வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.மரபியல் வழிவந்தவர் அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர்

அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும்அதனால்அட்சய திருதியை அள்ள, அள்ள குறையாமல் செல்வத்தை அள்ளி தரும்  சிறப்புமிக்க திருநாள் என்றுபோற்றப்படுகிறது.

வனவாச காலத்தில்,சூரிய பகவானை வேண்டி பாஞ்சாலி அட்சய பாத்திரம் பெற்றதும்,இதே அட்சய திருதியை தினத்தில் தான், அன்னபூரணி தாயாரிடம் இருந்து தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் ,பிரம்மஹஸ்தி தோஷத்திலிருந்து சிவபெருமான் விடுபட்டதும் இந்த நாளில் தான்.

ஏழுமலையான் தன் திருமணத்திற்கு குபேரனிடம் கடன வாங்கியதாக புராணம் சொல்கிறது குபேரன் மகாலட்சுமியை அட்சய திருதியை அன்று மனமுருகி வணங்கி செல்வத்தை பெற்றார் மேலும் பெருக்குவதாக ஐதிகம் எனவே அட்சய திருதியை அன்று லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லதாகும்.

ஐதங்கம் மட்டுமன்றி உப்பு,அரிசி,ஆடைகள்,விலை உயர்ந்த பொருட்கள் என என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.மேலும் அன்று புதிதாக தொழில் தொடங்குவதும்,பூமி பூஜை செய்வதும் நல்ல பலனைத் தரும். சங்கு வைத்து வழிபடுவது நல்லவற்றை தரும்.

அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால்,அது பலமடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது.இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம் பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையும்.அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்கள் வறுமை நீங்கி வளமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

author avatar
kavitha

Leave a Comment