அட்சய திரியை இன்று என்ன செய்ய வேண்டும்..!!செய்தால் என்ன பலன்..!!!

பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் போனபோது அவர்களுக்கு சூரிய பகவான் ஒரு அட்சய பாத்திரத்தைக் கொடுத்தார் என்று மகாபாரதம் சொல்கிறது. அள்ள அள்ள உணவைக் கொடுக்கும் இந்தப் பாத்திரத்துக்கு அமுத சுரபி என்ற பெயரும் உண்டு. இந்தப் பாத்திரத்தை திரௌபதி ஒரு நாளுக்கு ஒரு முறைதான் பயன்படுத்த வேண்டும் என்பது விதி. முடிந்ததும் கழுவி, கவிழ்த்துவிடுவார். ஒருநாள் மதியம் கிருஷ்ண பரமாத்மா பசியால் வருகிறார். பாத்திரத்தைக் கழுவி, கவிழ்த்துவிட்ட திரௌபதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

மகாவிஷ்ணுவைப் பிரார்த்தனை செய்து கொண்டு கழுவிய பாத்திரத்தை எடுத்துப் பார்க்கிறார். ஒரே ஒரு கீரைத்துண்டு மட்டும் அதில் இருக்கிறது. அதையும் பக்தியுடன் இலையில் வைத்துப் பரிமாறுகிறார். கிருஷ்ணபரமாத்மாவுக்கு வயிறு நிறைகிறது. இதன் மூலம் அட்சய திருதியை நாளில் இறைவனுக்குச் செய்யப்படுகிற நிவேதனம், பூஜை ஆகியவை வளத்தையும் நலத்தையும் தரும் என்று மகாபாரதம் சொல்கிறது.

ஒவ்வொரு மூன்றாம் பிறையின் போதும் அம்பிகை காட்சி கொடுத்து எல்லோருக்கும் அருள்புரிவதாகச் சித்தர்களும், யோகிகளும் சொல்கிறார்கள். அன்று சித்தர்கள் வானத்தில் வலம் வருவதாகவும் சொல்கிறர்கள். அதனால்தான் அந்தக் காலத்தில் மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்வது சிறந்தது என்று சொன்னார்கள். அன்று எதை வாங்கினாலும் செல்வம் பெருகும்.

கண்ணனின் நண்பரான குசேலரின் வாழ்க்கையில் வறுமை சூழ்ந்திருந்தது. தன் வறுமையை போக்க, கண்களில் ஆவலோடும்,ஒரு பிடி அவலோடும் கண்ணனை காணச்சென்றார் குசேலர்.அவலை எப்படி கொடுப்பது என்று குசேலர் யோசித்த போது, கண்ணன், “ அட்சய” என்று சொல்லி அந்த அவலை எடுத்து உண்டார்.வீடு திரும்பிய குசேலர் தன் வீட்டையும், மனைவியையும் அடையாளம் காண முடியாத அளவிற்கு செல்வம் குவிந்திருந்தது என்கிறது மற்றொரு புராண கதை.

அட்சய திருதியை நாளில், எண்ணெய் தேய்த்து குளித்து, விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லி, விரதம் மேற்கொள்ளலாம். பூஜை அறையில் விளக்கேற்றி, விஷ்ணு சகஸ்ரநாமமோ, அஷ்டோத்தரமோ சொல்லுங்கள். பாயசம் அல்லது பொங்கல் நைவேத்யமாக சமர்ப்பிக்கலாம். அன்று முழுதும், ‘ஓம் நமோ நாராயணா… ஸ்ரீமஹா விஷ்ணுவே நமஹ…’ என சொல்ல, நன்மைகள் கிடைக்கும்.

இந்நாளில், கொஞ்சமாவது தங்கம் வாங்கினால், ஆண்டு முழுதும் வீட்டில் தங்க மழை பொழிந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். இப்படிப்பட்ட அட்சய திருதியை நாமும் கொண்டாடி, வாழ்வில் நலமும், வளமும் பெறுவோம்!

அட்சய திருதியை நாளில்…

நலித்தோருக்கு உதவி செய்தால்-மறு பிறவியில், ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் கொடுத்தால்-நோய்கள் நீங்கும், பழங்கள் தானம் கொடுத்தால்- உயர் பதவிகள் கிடைக்கும், நீர் மோர்- பானகம் போன்றவை கொடுத்தால், கல்வி அறிவு பெருகும், தானியங்கள் தானம் கொடுத்தால்-அகால மரணம் ஏற்படாது,தயிர் சாதம் அளித்தால்-பாவ விமோசனமும், வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படும்,புண்ணிய நதியில் நீராடி, இறைவனை தொழுதால்-வாழ்வில் குறையாத செல்வம் பெருகும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment