"வல்லரசு இந்தியா" அப்துல் கலாம் கனவை நிறைவேற்றுவோம் ! - ஓ. பன்னீர்செல்வம்

Apj.அப்துல் காலம் இந்தியாவின் 11வது குடியரசு தலைவர் மற்றும் இந்திய விஞ்ஞானி ஆவார்.

By vidhuson | Published: Oct 15, 2019 10:02 AM

Apj.அப்துல் காலம் இந்தியாவின் 11வது குடியரசு தலைவர் மற்றும் இந்திய விஞ்ஞானி ஆவார். இவர் அக்.15, 1931ல் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் விண்வெளி ஆராய்ச்சி துறையில் பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் 2020ம் ஆண்டு இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இவர் உயரிய விருதான பாரத ரத்னா பெற்றுள்ளார். இவர் ஜீலை27, 2015ல் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், இன்று அப்துல் காலம் 88வது பிறந்த நாள் முன்னிட்டு பலர் பல சமூக சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நடும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, அதிமுக துணை தலைவரான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது டிவிட்டரில் "மக்களின் ஜனாதிபதி #அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது "வல்லரசு இந்தியா" கனவு ஈடேற ஒற்றுமையாய் உழைத்திடுவோம். ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக்குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்! இந்திய திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும்!" என ட்விட் செய்துள்ளார்.  
Step2: Place in ads Display sections

unicc