தலைவிக்காக பரதம் கற்கும் நடிகை கங்கனா!

நடிகை கங்கனா ரனாவத் பிரபலமான பாலிவுட் நடிகை ஆவார். இவர் தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய்

By Fahad | Published: Apr 06 2020 10:02 PM

நடிகை கங்கனா ரனாவத் பிரபலமான பாலிவுட் நடிகை ஆவார். இவர் தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்களின் இயக்கத்தில் வெளியாகும் தலைவி எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படம் முழுவதும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு ஆகும். இந்நிலையில், ஜெயலலிதா சிறுவயது முதலே பரதம் கற்று வளர்ந்தவர் என்பதால் கங்கானாவும் இந்த படத்திற்காக பரதம் கற்க தொடங்கியுள்ளாராம். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மைசூரில் நடைபெற உள்ளதாம். ஏனென்றால், ஜெயலலிதா தனது சிறு வயது காலங்களை முழுவதும் மைசூரில் தான் கழித்துள்ளார்.