அமமுக_வில் இணைந்தார் நடிகர் ரஞ்சித்…!!

  • அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததையடுத்து நடிகர் ரஞ்சித் பாமகவில் இருந்து விலகினார்.
  • TTV. தினகரனின் அமமுக கழகத்தில் நடிகர் ரஞ்சித் இணைந்துள்ளார்.

வருகின்ற மக்களவை தேர்தலில் அதிமுக , பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது. இது பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிருப்தி  ஏற்படுத்தியது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் துணை தலைவர் நடிகர் ரஞ்சித் நான் பாமகவில் இருந்து விலகுகின்றேன் என்று தெரிவித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

மேலும் அவர் அந்த பேட்டியில் கூறுகையில் நான் மக்கள் பனி செய்ய ஆசை படுகின்றேன்.கண்டிப்பாக மாற்று கட்சியில் இணைந்து என்னுடைய அரசியல் பணியை தொடருவேன் என்று கூறினார். இந்நிலையில் நடிகர் ரஜித் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment